சாமியார்கள் என்று சொல்லிக்கொள்ளும் தனிமனிதர்களின் காம லீலைகள் பொதுமக்களாலும்
ஊடகங்களாலும் சகித்துக்கொள்ளமுடியாத ஒன்றாக சில காலமாக பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் ஆன்மீகமும், கலையும், காமமும், ஆட்சியும் சமயம் சார்ந்ததாகவே இருந்தது,
இதற்கு அடையாளமாக கஜுராகோ கோயில் சிற்பங்களும், வாத்சாயனர் எழுதிய காமசூத்ரா நூலும்,தமிழகத்தை பொறுத்தவரை சீவகசிந்தாமனியும், ஆண்டாளின் திருப்பாவையும் சமயமும்
பாலியலும் இரண்டும் கலந்த ஒன்றாகவே இருந்தது,
மன்னர் ஆட்சி ஒழிந்து மக்கள் ஆட்சி ஏற்பட்ட பின்னர் அரசியலிலிருந்து மதத்தை தனியாக
பிரித்துவைக்கவேண்டிய சூழல் எழுந்தது. இந்தியா போன்ற பல்வேறு கலாச்சார பண்பாடு .
சமயக்கூறுகளை அடக்கிய மக்கள் தொகையை ஒரு குடையின் கீழ் ஆள்வதற்கான ஒரு
தந்திரமாகவே அரசியலிலிருந்து சமயம் பிரிக்கப்பட்டது.சமயச்சார்பின்மை என்பது தேசத்தை
ஒரு குடையின் கீழ் கட்டி ஆள்வதற்கான அரசியல் தந்திரமாக மாறியது.
அரசியலிலிருந்ஃது சமயத்தை பிரித்துபோல் சமயத்திலிருந்து கலைகளையும் பிரித்தனர் சமய
குருக்கள்.அப்போது பாலியலும் சமயத்திலிருந்து பிரித்து ஒதுக்கிவைக்கப்பட்டது.அதிகாரம் என்பது
ஒரு குவிமையத்திலிருந்து பல கிளைகளாக பிரிக்கப்பட்டது.
சமயம் தனியாக பிரிந்ததும் காவிவேட்டி உடுத்தியவன் எல்லாம் சாமியார்கள் என்று மக்களால்
பார்க்கப்பட்டனர்.இந்திய சுதந்திரத்துக்குப் பின் பல்வேறுபட்ட சாமியார்கள் தோன்ற ஆரம்பித்தனர்.
உதாரணமாக ரஜனீஷ் முதல் ஜே. கிருஷ்ணமூர்த்தி வரை சொல்ல்லாம். இந்த இருவருமே
நுனிநாக்கில் ஆங்கிலம் பேசக்கூடியவர்களாகவும் இந்து பக்தி இலக்கியங்களை மனப்பாடமாக
சொல்பவர்களாகவும் இருந்தனர். பல சாமியார்களும் இது சாமியார்களுக்கான தகுதியாக இன்றுவரை மக்களால் பார்க்கப்படுகிறது.
ரோமன் கத்தோலிக்க பாதிரியார்களைவிட அதிலிருந்து கிளைத்த ப்ராட்டஸ்தாந்து சமய பாதிரிகள் தூக்கத்தில் கூட பைபிளின் முழு வசனங்களை மனப்பாடமாக ஒப்புவித்த தால் ப்ராட்டஸ்தாந்து மதத்துக்கு பக்தர்கள் திரண்டுவந்ததை இன்று கண்கூடாக பார்க்கிறோம்.
ரஜினீசும் கிருஷ்ணமூர்தியும் மனப்பாடம் நுனிநாக்கு ஆங்கிலம் தவிர பேச்சாற்றல் உள்ளவர்களாகவும் இருந்தனர்.அத்தோடு இருவருமே உலக அளவில் தங்களின் கருத்துக்களை எடுத்துச்சென்றனர்.
ரஜினீஷை பொறுத்தவரை நிர்வாண ஆசிரமம் என்ற கவர்ச்சிகரமான ஒரு சொல்லாடல் இருந்து வந்தாலும் அதற்கு ஒரு உலகத்தரம் இருந்த தால் அது உலக சந்தையில் ஒரு காட்சிப் பொருளாகவும் சந்தைப் பொருளாகவும் மாறியதால்தான் போலிச்சாமியார் என்ற முத்திரை அவர்மேல் விழாமல் இருந்த்து.
ஆனால் அண்மைக்காலம் வரை போலிச்சாமியார்கள் என்று பத்திரிகைகளிலும் காட்சி ஊடகங்களிலும் குற்றம் சாட்டப்படும் சாமியார்கள் எல்லோருமே ரஜினீஷ் போன்ற சாமியார்களின் சந்தை நுட்பத்தில் தங்களை இணைக்கத்தவறியதுதான் இவர்களை குற்றவாளிகளாக மக்கள் பார்ப்பதற்கு இட்டுச்செல்கிறது.
பாலியல் என்பதற்கு நம் சமூகம் பல்வேறு தடைகளை கலாச்சார ரீதியாக விதித்திருந்தாலும் பாலியல் குறித்த சுதந்திரங்களை ஊடகமானது பூடகமான முறையில் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. ஊடகம் என்பது ஒரு ப்ளூ ப்லிமையோ அல்லது விரசமான காட்சிகளையோ ஒளிபரப்ப முடியாது. ஆனால் அதைப்போன்றதொரு விசயம்தான் ஊடகங்களின் சந்தைபோன்ற உணர்சிகரமான செய்திகள் இல்லையேல் ஊடக்த்தின் வரவேற்பும் மக்களிடையே இல்லாமல் போய்விடும். ஒவ்வொரு முறையும் ஒரு சாமியாரின் காம களியாட்ட காட்சிகள் ஒளிபரப்படும்போதெல்லாம் மீடியாக்களுக்கு அவை தீனியாக போய்விடுகிறது.
சாமியார்கள் மாட்டும்போதெல்லாம் சட்டத்துக்கும் நீதிமன்றத்துக்கும் காவல்முறைக்ஃகும் வேல வந்துவிடும். இலையேல் வடிவேல் சொல்வது மாதிரி யார்மே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துர என்றமாதிரி ஆகிவிடும். பிறகு இந்த மாதிரி நிறுவனங்களை மூடிவிடவேண்டியதுதான்.
சாமியார்கள் சொத்துசேர்ப்பது தவறில்லை, (பங்காரு சாமியார்) சாமியார்கள் அதிகார மையங்களாக(சந்திராசாமி) செயல்படுவது தவறில்லை. ஆனால் செக்ஸ் விஷயத்தில் வரும்போதுமட்டும் ஏன் அவை குற்றமாக பார்க்கப்படுகிறது. சாமியார்கள் என்றாலே பிரம்மச்சரியம் புலனடக்கம் ஆன்மீகம் ஞானம் வாக்குசுத்தம் வழிகாட்டிகள் என்று சமயம் சார்ந்த கருத்துக்களை சாமியார்கள் சாதுக்களிடம் எதிர்ப்பார்பதால் அதற்கு எதிரானதாக கருதப்படும் செக்ஸ் என்பது குற்றமாக பார்க்கப்படுகிறது.
அதிகாரப் பரவலாக தேசம் ஆனபின் ஒன்றுடன் ஒன்று கலந்து ஊடாடுவதி என்பதும் தேசக்குற்றமாக ஆகிவிட்டது. அது தேசத்தை பிளவுபடுத்திவிடும் என்பதால்தான் சாமியார்களின் பாலியல் நடவடிக்கை எனபது குற்றமாக இன்றைய கட்டத்தில் பார்க்கப்படுகிறது.
ஒரு அரசியல்வாதியோ ( என் டி திவாரி) ஒரு பிரமுகரோ ஒரு தனிமனிதனோ பாலியல் குற்றச்சாட்டுகளில் முத்தரை குத்தப்படும்போது அது ஒழுக்க்ககேடான விசயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் குற்றத்தின் தன்மைக்கேற்ப தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு சாமியார் விருப்ப ப்பட்ட பெண்களுடன் சல்லாபம் புரிந்தாலே அது தண்டனைக்கரிய குற்றமாக பார்க்கப்படுகிறது.பலருமே ஏதோ ஒரு வகையில் இந்த ஆன்மீக சந்தையை புரிந்து கொள்ளாதவர்களாகவே இருப்பது அவர்களின் திரதிஷ்டமே.
அண்னாயில் நித்யானந்த சாமியாரின் காம லீலைகளை பல ஊடகங்கள் வெளிப்படுத்தியபோது சாமியாருடன் உல்லாசமாக இருந்த நடிகையின் முகம் மாத்திரம் கிராபிக்ஸ்கொண்டு மறைக்கப்பட்டிருந்த்து. யார் அந்த நடிகை என்று மக்கள் கேட்க ஆரம்பித்தனர். இதேபோல் குற்றம்சாட்டப்படும் எல்லா சாமியார்களுடனும் ஏதோ ஒரு வகையில் பெண்கள்(அதாவது பக்தர்கள்) சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களையும் தண்டிக்கவேண்டும் என்று சிலர் நினைப்பது அதிகார மட்டத்தில் நடக்கமுடியாத காரியம் . பக்தர்கள் என்பவர்கள் தனிமனிதர்கள். ஆனால் சாமியார்கள் எனும் ஒரு அடையாளம் என்பது தேசத்தின் ஒரு அதிகார கண்ணிகளில் ஒரு கண்ணி. இந்த கண்ணிக்கு பிரச்சனை ஏற்படும்போது மற்ற கண்ணிகளுக்கும் பிரச்சனை ஏற்படும் ஆன்மீக சந்தையை புரிந்தகொண்டால் சாமியார்களின் காமகளியாட்டங்கள்கூட சாதாரணமாகிப்போய்விடும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment