Monday, March 1, 2010

சுல்தான் தி கிரேட்

இன்றைய காலகட்டத்தில் அரசியல் என்பது ஒரு பூடகமான வெளியில் இயங்குவதாக மாறிக்கொண்டிருக்கிறது. ஸ்தூலமான அரசியலில் செயல்படுபவர்கள் மிகச் சிலரே என்றாகிவிட்டது. யாரும் வெளிப்படையாக செயல்படவோ கருத்துச்சொல்லவோ பயப்படுகிறார்கள்.

பூடகமாக இருந்து செயல்படும் பட்சத்தில்தான் தங்கள் சொந்த அரசியலை சாத்தியமாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

இதற்கு தமிழக அரசியலில் அண்மைக்காலமாக நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் நகர்வுகள் முக்கியமாகப்படுகிறது. தனது சொந்த விறுப்பு வெறுப்புகளையே இவர் அரசியல் தளத்தில் உதிர்த்தும் காட்சியாக்கியும் வருவது சிந்திக்கத்தக்கது.

தமிழக அரசியலைப் பொறத்த அளவில் கலைத்துறை அதுவும் சினிமா என்பது ஆதிக்கம் செலுத்திவரும் ஒரு துறை.

எம்ஜியார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அரசியல் பிரவேசம் செய்து ஆட்சியமைத்து ஆண்டுகொண்டிருந்த பல ஆண்டுகளுக்கு பின்தான் அவரது தொப்பியும் கறுப்புக்கண்ணாடியும் ஒரு பிம்பமாக உலாவந்தன.காந்தியின் மூக்குக்கண்ணாடியும் கைத்தடியும் பொதுப்புத்தியில் காட்சியாக பிம்பமாக வந்த்துபோல் இந்த தொப்பியையும் கண்ணாடியையும் எடுத்துக்கொள்ளலாம்.அதன்பிறகு எம்ஜியாரின் இரட்டைஇலைச்சின்னத்துக்கு எப்படி மவுசு வந்த்தென்றும் அது தமிழக அரசியலில் முக்கிய பிம்பமாக மாறி அரசியல் செய்த தையும் நாம் அ

றிவோம்.

ஆனால் ஒரு வரலாற்றுக்கு நிகழ்வுக்குப்பின் அந்த வரலாற்றின் முக்கியமான சில அடையாளங்கள் பிம்பமாக மாறி அரசியலாகும் கவர்ச்சி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் காலவதியான வரலாற்றையும் நாம் பல்வேறு தளங்களில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ரஜினியின் பல்வேறு பிம்பங்கள் ஒருகட்டத்துக்கு மேல் எடுபடாமல் போய்விட்டது. பாபா முத்திரை வரைக்கும் ஆங்கிலபடரேஞ்சுக்கு போனாலும் படமும் தோல்வியடைந்த து.

எம்ஜியாரின் தொப்பி கிளாசுக்கு நிகராகவும் நிற்கமுடியவில்லை.எம்ஜியாரின் பிம்பங்கள் அவரது நீண்ட கால கட்ட கலை மற்றும் அரசியல் பங்கேற்புக்குப்பின் வந்தவை. ஆனால் ரஜினியின் நகர்வுகள் பிம்பங்களை முதலில் உற்பத்தி செய்துவிட்டு அதை அரசியலாக்கும் தன்னையில் உருவானவை.

காந்தி எம்ஜியார் போன்றவர்களிலிருந்து பிறந்த பிம்பங்கள் அவர்களின் நீண்ட வாழ்க்கைக்கு பின்பு பொதுதளங்களில் இயங்கியஙைழ இது அவர்களால் ஏற்பட்டவை அல்ல. ஆனால் பாபா வரை பல பிம்பங்களை உற்பத்தி செய்ய முயன்ற ரஜினி அது அரசியலாகும் தன்மை இல்லாது போகவே அடுத்த கட்ட முயற்சிக்கான அடையாளம்தான் அவர் தயாரிக்கும் சுல்தான் தி கிரேட் திரைப்படம்.

வாழ்க்கையிலிருந்து திரைப்படங்களிலிருந்து கருத்துக்களிலிருந்து பிம்பங்கள் உருவாக்கப்படுவதற்கு நேர்மாறான செயல்தான் இந்த அனிமேஷன் திரைப்படம்.

சிலைக்கு பதிலாக இந்த அனிமேஷன் பிம்பங்கள்.பிம்பமாகவோ சிலையாகவோ முடியாத சூழ்நிலையில் அனிமேஷன் படங்களாக பிறகு ஸிடிக்கர்கள் என்று பிம்பங்கள் வினியோகம் சாதாரண சந்தைவரை வந்துவிடக்கூடும். ஒருகாலத்தில் திரைப்படங்களின் பெயரைவைத்து நக்மா சாரி குஷெபு பிளவுஸ் இன்னொரு நடிகையின் கொண்டை அந்த நடிகையின் பாவாடை என்று திணிக்கடைகள் பலவும் வியாபாரத்தில் பணம் பார்த்தன. ரஜினியின் இந்த சுல்தான் படமும் ரஜினி என்ற விற்கப்படாத முடியாத பிம்பங்களை விற்று காசாக்குவதற்கான முயற்சியே..நுகர்வு கலாச்சார சந்தையில் ரஜினியின் பிம்பத்தை நவீன ஸிடிக்கர் சிலைகளாக மாற்றி நுகர்வோரின் வாங்கும்சக்தியை சோதித்துப்பார்ப்பதே இதன் நோக்கம். ஏமாந்தால் இன்னும் ரஜினி ஸிடிக்கர்களுக்கான படங்கள் வரும்.

இதற்கான அதாவது முழு நீ. அனிமேஷன் படமான சுல்தானுக்கான முன்னோட்டம்தான் பாதி அனிமேஷனும் பாதி நிஜ ரஜினியும் தோன்றப்போகும் எந்திரன் படம்.

எந்திரனின் முன்னால் பெயர் ரோபோ. இயந்திரங்களின் கண்டரோல் மக்களிடம் இருக்கவேண்டும். இல்லையேல் நீங்கள் இயந்திரங்களாக மாறிவிடவேண்டியதிதான்.

No comments:

Post a Comment